நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

கொழும்பு,செப் 22

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த மாதத்தின் இதுவரையிலான காலப்பகுதியில்  மாத்திரம்  2  ஆயிரத்து 298 டெங்கு நோயாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply