நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துக்கள் பதிவு

கொழும்பு,செப் 22

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

பன்னல, தங்கொடுவ வீதியில் மாகந்துறையில் இருந்து பன்னல நோக்கி பயணித்த லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பெரிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லொறியின் சாரதியும், முன் இடது பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பயணியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு-இரத்தினபுரி வீதியில் கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியில் வலப்புறம் திரும்பும் போது, கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளொன்று குறித்த லொறியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.

கிரிந்திவெல – நிட்டம்புவ வீதியில் தியகொடெல்ல பிரதேசத்தில் நிட்டம்புவ நோக்கி சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டிக்குள் இருந்த மரத்தவளை ஒன்று சாரதியின் உடல் மீது பாய்ந்ததில், சாரதியின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி வீதியில் குடைசாய்ந்துள்ளது.
இதன்போது, எதிர்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது மனைவி மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply