இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா பாகிஸ்தான்? இரண்டாவது ரி-20 இன்று!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் இங்கிலாந்து அணிக்கு மொயின் அலியும் தலைமை தாங்கவுள்ளனர்.

முன்னதாக இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

ஆகவே இங்கிலாந்து அணி தங்களது வெற்றியை தொடரவும், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு இன்றையப் போட்டியில் பதிலடி கொடுக்கவும் போராடும்.

ஏழு ரி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply