நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அமெரிக்க துணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணைச் செயலாளர் Victoria Nuland தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றின் மூலம் குறித்த விடயத்தை பதிவேற்றியுள்ளார்.
அத்துடன் தற்போது அமெரிக்க சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிக்கும் மெரிக்க துணைச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க அமெரிக்கா தயாராகவுள்ளதாக அமெரிக்க துணைச் செயலாளர் Victoria Nuland உறுதியளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மேலும் சுதந்திரமான மற்றும் வளமான நாடாக இலங்கையை மாற்றுவதற்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்





