
போதை சம்மந்தமான பொருட்களை யாழ் மாவட்டத்திலோ அல்லது இலங்கைக்கு கொண்டு வருவதனை சம்மந்தப்பட்ட திணைக்களங்களினால் தடுக்கமுடியும் .எனினும் ஏன் இங்கே போதைப்பொருள் பாவனை இடம்பெறுகின்றது ,என்ற எண்ணம் நம் அனைவரினதும் உள்ளங்களிலும் எழலாம்.
அந்தவகையில் அவ்வாறான நடவடிக்கைகளைத் தடுக்க அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு மனிதனும் ,ஒவ்வொரு குடும்ப அங்கத்தவர்களும் இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என அதாவது வேறு காரணங்களை விடுத்து புதைப்பொருள் பாவனையினை முன்னிலைப்படுத்தி செயற்பட்டோமானால் போதைப்பொருள் பாவனையினை தடுப்பதற்குரிய ஒவ்வொரு மனிதனுடைய முயற்சியாக அது அமையும் என உதவி மாவட்டச் செயலாளர் கிரிசாந்தி கமலராஜன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
அவ்வாறான நடவடிக்கைகளைத் தடுக்க அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு மனிதனும் ,ஒவ்வொரு குடும்ப அங்கத்தவர்களும் இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும் என அதாவது வேறு காரணங்களை விடுத்து அதனை முன்னிலைப்படுத்தி செயற்பட்டோமானால் போதைப்பொருள் பாவனையினை தடுப்பதற்குரிய ஒவ்வொரு மனிதனுடைய முயற்சியாக அது அமையும் .
விஷேடமாக தாய்,தந்தையர் தங்கள் பிள்ளைகள் மட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் .போதைக்கு அடிமையாகி அல்லது போதைப்பாவனையில் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றவர்களுக்கு சேவை செய்வதற்கு தேசிய அபாயகார ஒளடதங்களின் சபையின் Hotline Number -1927 ஊடாக எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.உங்களுக்கு தேவையான சேவைகளை ,உதவிகளை எங்களால் செய்யக்கூடியதாக இருக்கும்.
சேவை நாடி செல்ல வேண்டுமெனில் ஒவ்வொரு பொதுச் சுகாதார சேவைகளிலும் மற்றும் சாவகச்சேரியில் உள்ள ஆதார வைத்தியசாலையில் பிரிவிற்கும் சென்று உங்கள் உதவிகளைப் பெற்றுக்கொள்ளாம்.என்றார்.
பிறசெய்திகள்





