முல்லையில் நீதிமன்ற தடையை மீறி நடைபெறும் கட்டுமானப் பணிகள்- மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டு!

கடந்த பல வருடங்களாக எமது தமிழர் தாயக பூர்வீக நிலங்களை பௌத்த பேரினவாத அரசு கைப்பற்றிக்கொண்டிருக்கிறது .அதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மண்ணிலே இருக்கும் குருந்தூர்மலையில் உள்ள சிவன் ஆலயத்தினை அழித்து விட்டு அதே இடத்தில் அவர்கள் பௌத்த விகாரையினை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என யாழ்.பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை பௌத்த விகாரையினை அங்கு கட்ட வேண்டாம் என்று நீதிமன்றத்தால் தடை விதித்திருந்த போதிலும் தமது சட்டத்தினை பயன்படுத்தி அதனை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அங்கிருக்கின்ற பிரதேச செயலகங்கள் ,மாவட்டச் செயலகங்கள் ,விவசாய திணைக்களங்கள் என யாரிடமும் அனுமதி பெறாத நிலையில் அந்த இடத்தினை கைப்பற்றி இன்றுவரை அந்த விகாரையினை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்றைய தினம் இடம்பெற்ற குறுந்தூர் மலை போராட்டத்திற்கு சென்று இருந்தோம். நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட இடத்தில் எமது பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பின் பிரகாரம் அங்கு வேலைகள் மறைமுகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதனை அனைத்து மக்களும் கருத்தில் கொள்ள வேண்டும் தமிழ் அரசியல் தரப்பினரும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் . தமிழர் பூர்வீக நிலங்களை தமிழருக்குரிய நிலங்கள் முற்றுமுழுதாக மறுக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இடம்பெற்ற போராடடத்தில் கைதுசெய்யப்பட்ட மயூரன் மற்றும் ரவிகரன் ஆகியோர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.இல்லையென்றால் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக இணைந்து பாரிய போராட்டத்தினை முன்னெடுப்போம் என கூறிக்கொள்கிறோம்.என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply