பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரைகள் ஒன்லைனில்!

மாணவர்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடம் மூடப்பட்டுள்ளதுடன், இணையத்தில் விரிவுரைகள் நடத்தப்படுவதாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதைக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கடந்த வாரம் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் பௌதீக விரிவுரைகளை நடாத்துவது கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், மறு அறிவித்தல் வரையில் விரிவுரைகள் ஒன்லைனில் நடத்தப்படும் எனவும் கலை பீடத்தின் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மாணவர்கள் வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply