அரசாங்கத்தினால் நாட்டின் வறுமையை இல்லாமல் செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடலாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
சமுர்த்தி திணைக்களத்தினால் ‘சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை’ எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய மரநடுகை தின சுற்றாடல் வேலைத்திட்டத்தினை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மர நடுகை வாரம் கடந்த 17.09.2022 தொடக்கம் 23.09.2022 வரை பிரகடனப்படுத்தி நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக ஓட்டமாவடியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் சூடுபத்தின சேனையில் உள்ள திண்மக்கழிவகற்றல் நிலைய வளாகத்திலும் பயன் தரும் மரங்கள் நடப்பட்டன.
ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி திணைக்களத்தின் தலைமை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் வீ.தவராஜா மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஏ.எம.எம் நௌபர் ஆகியோர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் கருத்திட்ட முகாமையாளர் ந.விஜிதன் எனப் பலர் கலந்து கொண்டனர்.

பிறசெய்திகள்





