யாழில் பரவி வரும் மதம் மாற்றுப் புற்று நோய்

மிக நீண்ட காலமாக இலங்கையினை பீடித்திருக்கின்ற மத மாற்றம் என்கின்ற புற்று நோய் யாழ்ப்பாணத்தில் மிக வேகமாக வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது என சிவசேனை அமைப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

நேற்றைய தினமும் அதற்கு முன்னைய தினமும் சிவபூமியாகிய மண்ணிலே மத போதகர்களுடைய மதப்பிரச்சார விளம்பர பதாதைகளைகாணக்கூடியதாக உள்ளது.

இந்த மதம் மற்றும் பிரச்சார நடவடிக்கையானது ஒரு அந்நிய நாட்டவரினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடாக அமைந்திருக்கின்றது.சுற்றுலா விசாவில் வந்து மத மாற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுபொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற ஏழை மக்களை டொலரைக் காட்டி கவர்ந்திழுக்கின்ற தங்கள் பக்கம் மதம் மாற்றுகின்ற இழிவான செயலில் இந்த போதகர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

எதிரவரும் 26,27 ஆம் திகதிகளில் இந்த மதம் மாற்றுகின்ற பிரச்சாரத்திலே குறித்த அலெக்ஸ் என்ற போதகர் ஈடுபட இருக்கின்றார்.இதனை தடுத்து நிறுத்த வேண்டிய ஒரு இக்கட்டான நிலையிலே எங்களுடைய இந்துக்கள் உள்ளனர்.இவர் மீறி கூட்டத்தினை நடத்தினார் என்றால் இலங்கையின் தண்டனை கோவை சட்டத்தின் பிரகாரம் கைது செய்ய முடியும் .

அரச நிறுவனம் ,தனியார் கல்லூரி,பாடசாலைகள் ஆகியவற்றில் இவ்வாறான சட்ட விரோத பிரச்சாரங்களை பரப்புவது சட்ட விரோதமானது ,இதனால் அந்த பாடசாலையின் அதிபர் கைது செய்யப்படலாம்.

கொடிய நோய் பிடித்தவர்களை தான் சுகமாக்குகின்றேன் என்று கூறியிருக்கிறார் .இது எத்தகைய அப்பட்டமான பொய் .வைத்தியர்கள் ,வைத்தியசாலைகள் இருக்கின்ற பொழுது ,இவர் இவ்வாறு ஒரு பொய்யினை சொல்லி தங்களின் மதத்திற்காக மக்களை எடுப்பதற்க்காக இவ்வாறான பொய்களை சொல்லுகிறர் என்பதனை எங்கள் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

இத்தகைய செயற்பாடுகளை பொலிஸ் அதிகாரிகள் ,அரச அதிபர்கள் ,ஆளுநர் குறிப்பாக அந்த கல்லூரி அதிபர் அனுமதியினை இரத்து செய்து எங்கள் மக்களை அமைதியாக தங்கள் தங்கள் மதங்களை வழிபடுவதற்கு ஏற்பாடு செய்வார்கள் என்ற நம்புகிறேன் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply