விமான படையினரின் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இரு வியாழக்கிழமை(22) நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அன்று விமான படையினரின் புக்காரா விமானம் வீசிய குண்டு தாக்குதலில் நாகர்கோவில் மகாவித்தியத்தியாலயத்தின் 21 மாணவர்கள் உயிரிழந்தனர்.

கொல்லப்பட்ட மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு பாடசாலையில் இன்று இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த சுந்தரலிங்கம் என்பவர் பொதுச் சுடரினை ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டனர்.அத்துடன் நினைவுத் தூபிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் 21 மாணவர்களின் உருவப் படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
பிறசெய்திகள்





