அநுராதபுரத்தில் குடிநீர்த்தொகுதிகள் கையளிப்பு

I.H.H.N.L இன் அனுசரணையில் அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேஷன் ஏற்பாட்டில் அனுராதபுரத்தில் ஏழு குடீர்த் தொகுதிகள் கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (22) நடைபெற்றன.

அநுராதபுரம் புளியங்குளம் அந்நஹ்ழா அஹதிய்யா பாடசாலை,அநுராதபுரம் பகல புலியம் குளம் சிங்கள வித்தியாலயம்,அநுராதபுரம் புளியங்குளம் முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித்,அநுராதபுரம் மரியம் தக்கியா,அநுராதபுரம் பிலால் தக்கியா,கொல்லன்குட்டிகம முஸ்லிம் வித்தியாலயம்,அனுராதபுரம் இர்ஷாதியா மத்ரஸா ஆகியவற்றுக்கே குடிநீர்த் தொகுதிகள் கையளிக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதம அதிதியாக அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேஷனின் தலைவர் கஸ்ஸாலி முகமட் பாத்திஹ் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு பயனாளிகளுக்கு குடிநீர்த்தொகுதியை கையளித்தார்.

மேலும் நிகழ்வுகளில் ஊர் பிரமுகர்களும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply