நாட்டில் முட்டைக்கு மீண்டும் சிக்கல்?

நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசியல்சார் விடயங்களுக்கு அடுத்த பேசுபொருளாக காணப்படுவது முட்டை மற்றும் கோழி இறைச்சிகளின் விலை அதிகரிப்பு தொடர்பான விடயங்களே.

இவ்வாறான நிலையில் முட்டை ஒன்றின் விலை 75 ரூபா வரை உயரக்கூடும் என தேசிய கால்நடை சபையின் தலைவர் சிரில் தெரிவித்துள்ளார்.

மக்காச்சோளம் உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், கட்டுப்பாட்டு விலையில் முட்டை உற்பத்தியை முன்னெடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 48 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கேற்ப முட்டைகளை கட்டுப்பாட்டு விலையில் விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கால்நடை உற்பத்தி பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தையில் ஒரு முட்டையை 48 ரூபாய்க்கு விற்பனை செய்ய, பண்ணையில் இருந்து வரும் முட்டைக்கு குறைந்தபட்சம் 36 ரூபாய் வழங்க வேண்டும்.

ஆனால் கால்நடை தீவனம், தண்ணீர், மின்சாரம் மற்றும் தொழிலாளர் கட்டணம் அதிகரித்துள்ளதால், 48 ரூபாய் வரை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply