நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களில் மாத்திரம் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் யாழ் நகரிலுள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 16 வயது மாணவன் ஒருவன் உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையானது திட்டமிடப்பட்ட வகையில் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் ஓர் மறைமுக நடவடிக்கையாக இருக்குமோ என பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்





