யாழில், அனுமதிப்பத்திரமன்றி மணலேற்றிச் சென்ற நான்கு வாகனங்களும், அதன் சாரதிகாளும் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் முறையான அனுமதிப்பத்திரமன்றி மணலேற்றிச் சென்ற நான்கு டிப்பரையும் அதன் நான்கு சாரதிகளை கோப்பாய் போக்குவரத்து பொலிசார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது:-

கோப்பாய் சந்திக்கு அண்மையில் உள்ள பகுதியில் கோப்பாய் போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை நான்கு டிப்பர் வாகனங்களை வழிமறித்து சோதனையிட்ட பொழுது அனுமதிப்பத்திரம் இன்றி மண்ணேற்றிச் சென்றமை தெரியவந்தது.

இதனையடுத்து நான்கு டிப்பர் வாகனத்தையும் குறித்த டிப்பரை செலுத்தி வந்த கிளிநொச்சி மற்றும் விசுவமடு பகுதியைச் சேர்ந்த நான்கு சந்தேகநபர்களை கோப்பாய் பொலிசார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply