ரணிலின் வீட்டிலிருந்த சமபோஷா அபேஸ்:சந்தேக நபர்களுக்கு பிணை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டபோது , அத்துமீறி நுழைந்து சமபோஷா பைக்கற்றைத் திருடிய குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேகநபர்களை தலா 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் திலன கமகே உத்தரவிட்டுள்ளார் .

சந்தேகநபர்கள் 51 நாள்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் வயது மற்றும் விசாரணையின் முன்னேற்றம் உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற்கொண்டு பிணை வழங்கப்பட்டுள்ளது என நீதிவான் திலன கமகே தெரிவித்துள்ளார் .

அடுத்த மாதம் 5 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்காக மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply