
களனி – பட்டிய சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், நேற்றைய தினம் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு, அவர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் 53 ஆயிரம் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி பட்டிய சந்தி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்திற்கு உதவியதாக தெரிவித்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
39 மற்றும் 42 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்





