
காரைநகருக்கு சுற்றுலாவியாக வந்திருந்த ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து அச்சுறுத்தி, பாலியல் சேட்டையில் ஈடுபட்டனர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் , பாலியல் சேட்டை புரிந்தனரென அடையாளம் காணப்பட்ட 10 இளைஞர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மையாகவுள்ள வெளிச்சக் கூட்டுக் கோபுரப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
சுற்றுலாவியாக வந்த பெண்ணும் அவரது நண்பரும் சென்று கொண்டிருந்தபோது அவர்களை 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுற்றி வளைத்து, தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளனர். அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். இதன் பின்னர் சில இளைஞர்கள் சுற்றுலாவிப் பெண்ணுடன் பாலியல் சேஷ்டையிலும் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட போராட்டத்தின் பின்னர் அவர்களிடமிருந்து தப்பித்த பெண், பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக ,நேற்று இரவே 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.




