42 கிலோ கேரளக் கஞ்சா பரு. சக்கோட்டையில் மீட்பு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் 42 கிலோகிராம் கேரளக் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவத்தினர் இந்தக் கஞ்சாப் பொதிகளை மீட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் மதுவரித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply