
யாழ்.நகரப் பகுதியில் உயிர்கொல்லியான ஹெரோய்ன் போதைப்பொருடன் பாடசாலை மாணவன் ஒருவர் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
யாழ்ப்பாண நகரிலுள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 16 வயது மாணவன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளான்.
கைதுசெய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் நடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.




