கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரண நிதியுதவி!

2022 தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரைக்கான 4 வருடங்கள் உடல்நலம், சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற மூன்று கூறுகளின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள இக்கருத்திட்டத்தின் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் 5 பிரதேச செலயகப் பிரிவில் 72, 400 பேரும், பதுளை மாவட்டத்தில் 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் 19,350 பேரும் நேரடியாகப் பயனடைவார்கள்.

மேலும்,கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் முகவர் நிறுவனத்தால் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள 6 மில்லியன் டொலர் பெறுமதியான இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் சார்பாக ஐக்கிய நாடுகளின் மனித குடியமர்த்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், அதன் அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் முகவர் நிறுவனம், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கும் இடையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை அறிக்கை ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply