மயிலிட்டியில் காணி விடுவிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மயிலிட்டி,செப் 23

காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.

வலி வடக்கு முன்கொடியேற்ற சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைந்த குழுவினால் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது கடந்த 30 வருடங்களாக வலி வடக்குப் பகுதியில் விடுவிக்கப்படாமல் இருக்கும் ஏனைய மூவாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், மக்கள் அவர்களுடைய சொந்த காணிகளில் குடியமர்த்தி அரசாங்கம் அவர்களுக்கு வீட்டு திட்டத்தினை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து இந்த அமைதி முறையான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply