<!–
திரிபோசாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் கலந்துள்ளதாக கூறப்பட்டமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் இன்றும் (வெள்ளிக்கிழமை) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது நாளாக அவர் சுகாதார அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவின் விசேட சோதனைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வாக்குமூலமளிக்க வந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உபுல் ரோஹண, திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் கலந்துள்ளதாக தாம் கூறிய கருத்து சரியானது எனவும் தெரிவித்தார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.





