புத்தளம், நுரைச்சோலை – இளந்தையடி பகுதியில் ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 40 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நுரைச்சோலை இளந்தையடி பகுதியில் இன்று அதிகாலை மேற்கொண்ட விஷேட சுற்றி வளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 8 உரை மூடைகளில் இருந்து 160 கிலோ கிராம் நிறையுடைய கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதற்காக பயன்படுத்தப்பட்ட சொகு கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.


பிற செய்திகள்




