
யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமயில் இடம்பெற்ற இந்தக் காலந்துரையாடலில் ,பிரதேச செயலாளர்கள் ,கல்வி ,சுகாதாரா அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்தல்,போதைப் பொருள் பாவனையை இல்லாமல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் சிறுவர் இல்லங்கள்,பாடசாலைகள்,தனியார் கல்வி நிலையங்களை கடுமையாக மேற்பார்வை செய்தல்மற்றும் ஒழுங்கு படுத்தல்,கிராம மட்டதில் விழுப்புணர்வு செயற்பாடுகளை ஆரம்பித்தல்,உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிற செய்திகள்




