தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினருடனான நேரடி கலந்துரையாடல் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் திருமதி.ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமை தாங்கலுடன் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் திரு.நா.தனஞ்ஜெயன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு.இரா.பிரசாந்தன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எஸ்.பத்மராஜா, திட்டமிடல் கிளையின் சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் திரு. ஜெ.நிகாத் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று(23) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதேச செயலாளர், தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழலில் இருந்து கிராமங்களை மீட்டெடுப்பதில் சங்கங்களுக்கு பாரிய பொறுப்பு காணப்படுகின்றது மேலும் சங்கங்கள் தமது செயற்பாடுகளை கிராம மட்டத்தில் விரிவுபடுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்
தொடர்ந்து கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் அவர்கள் சங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் உணவுப் பாதுகாப்பினை கிராம மட்டத்தில் உறுதிப்படுத்த சங்கங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என ஆலோசனைகளை வழங்கி அது தொடர்பாக சங்க அங்கத்தவர்களுடன் கலந்துரையாடினார்.


பிற செய்திகள்




