ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் சென்ற 37 இலங்கையர்கள் கைது!

இலங்கையர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டவர்கள், ரொமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்குடன் தப்பிச்செல்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொருட்களை ஏற்றிச்சென்ற மூன்று பாரவூர்திகளில் மறைந்து பயணித்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 70 பேரில் 37 இலங்கையர்கள் உள்ளடங்கியிருந்தனர்.

எனினும் அவர்கள், இலங்கையின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

முதலாவது சம்பவத்தில், இத்தாலிக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியில் இருந்து 35 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

ஹங்கேரி மேற்கு எல்லையில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம் போலந்துக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச்சென்ற இரண்டாவது பாரவூர்தியில் மறைந்திருந்த நிலையில் 20 துருக்கியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மூன்றாவது பாரவூர்தி, வாகன உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு இத்தாலிக்கு பயணித்த நிலையில் அதில் இருந்து 15 பங்களாதேஷ் மற்றும் எத்தியோப்பியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply