
கொழும்பு, செப். 24: கொழும்பின் சில பிரதேசங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
இதன்படி, உயர்நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம், கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஆகிய நீதிமன்ற வளாகங்கள், சட்ட மா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, கடற்படை தலைமையகம் மற்றும் காவல்துறை தலைமையகம் என்பன அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அகுரேகொட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம், கொம்பனித் தெரு விமானப்படை தலைமையகம், பிரதமர் அலுவலகம், கொள்ளுப்பிட்டி அலரிமாளிகை, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்ல பிரதேசம் என்பன அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.




