ஜனாதிபதியை உசுப்பேற்றம் வகையில் நான் எதனையும் கூறவில்லை. முன்னாள் ஜனாதிபதி சபையில் பொய்களை கூறி வருகிறார். முன்னாள் ஜனாதிபதி என்றவகையில் பொய்களை கூறுவது நல்லதல்ல என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நான் சபையில் இல்லாபோது என்னை பற்றி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கீழ்த்தரமாக கூறியிருக்கிறார்.
குழியை ஆழமாக தோண்டும்போது மனம் வரும் என்கிறார். இதனை ஏற்றுகொள்கிறேன்.
குழியை தோண்ட தோண்ட அர்ஜுன் அலோசியஸின் காசோலைகளும் வரலாம் எனவும் சாடினார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்






