உள்ளுர் சினிமா துறையை கட்டியெழுப்ப விசேட குழு!

உள்ளுர் சினிமா துறையை கட்டியெழுப்புவதற்கு பாராளுமன்றத்திற்கு பரிந்துரைகளை வழங்கக்கூடிய விசேட குழுவொன்றை நியமிக்குமாறு 21 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர, மஹத்வருண் உள்ளிட்ட 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட இந்தக் கடிதம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் உத்திக பிரேமரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.

1971 முதல் 1979 வரையிலான காலப்பகுதியில் இருந்ததைப் போன்று உள்ளூர் திரைப்படத் துறையை மீண்டும் பார்வையாளர்களின் ஈர்ப்பைப் பெறச் செய்தல், பாரம்பரிய திரைப்படத் தயாரிப்பிற்குப் பதிலாக டிஜிட்டல் மயமாக்கல் திரைப்படப் பள்ளியை உருவாக்குதல் போன்ற பல திட்டங்களை நிறைவேற்றும் வகையில் இந்த சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply