பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் ஆரோக்கியமான உணவு! – அமைச்சர் பந்துல

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் முறையான உணவு வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை உண்மையாகும்.

எனினும் விரைவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சில சம்பவங்களை மாத்திரம் கொண்டு அவற்றை திரிபுபடுத்தி வேறு வகையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

எமது காலத்திலும் பாடசாலைகளில் காலைக்கூட்டம் இடம்பெறும் போது, மாணவர்கள் மயங்கி விழுவது வழமையானதொரு விடயமாகும். இது பாடசாலைக்கு சென்ற அனைவரும் அறிந்த பொதுவானதொரு விடயமாகும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் முறையான உணவு வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை உண்மையாகும்.

எனவே தான் அரசாங்கத்தினால் நிவாரண வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமையவே நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில், பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சரினால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply