ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

ஹூரகஸ்மங்ஹந்திய, செப்.24

கஜமுத்துக்களுடன் ஹூரகஸ்மங்ஹந்திய பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 8 கஜமுத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி சுமார் ரூ.1 கோடி எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 43 வயதுடையவர் எனவும், அவர் ஹூரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply