யாழ்.வெங்கடேஸ்வரபெருமாள் ஆலயத்தில் புரட்டாதி சனிவிரத பூசை முன்னேடுப்பு

<!–

யாழ்.வெங்கடேஸ்வரபெருமாள் ஆலயத்தில் புரட்டாதி சனிவிரத பூசை முன்னேடுப்பு – Athavan News

யாழ்ப்பாணம் வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் சனி பகவானின் புரட்டாதி சனிவிரத பூசை சிறப்பாக இடம் பெற்றது

இன்று (சனிக்கிழமை) சனி பகவானின் புரட்டாதி சனி விரதம் ஆரம்பமாகின்ற நிலையில் யாழ் நகரில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்திற்கு பெருமளவிலான பக்தர்கள் எள் எண்ணெய் சுட்டி எரித்ததோடு ஆலயத்தில் பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர் .

புரட்டாசி விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

இதேவேளை யாழ் சிவன் ஆலயங்கள் மற்றும் பெருமாள் ஆலயங்களில் விசேட பூஜைகள் அபிஷேகங்கள் தீபாராதனைகள் என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply