அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்தின் சக்கரங்கள் கழன்று விபத்து

கொழும்பு, செப்24

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்றின் பின் சக்கரங்கள் இரண்டும் கழன்று விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடங்கொட மற்றும் வெலிப்பன்ன நுழைவாயிலுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கதிர்காமத்திலிருந்து கொட்டாவ பகுதிக்கு அதிகளவான பயணிகளுடன் பேருந்து  பயணித்துள்ளது. பேருந்தின் இரண்டு சக்கரங்கள் கழன்று விழுந்த பிறகும் சுமார் அரை கிலோமீற்றர் தூரம் முன்னோக்கி இழுத்துச் சென்று நின்றுள்ளது.

இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது.

Leave a Reply