திலீபனுடன் பத்தாம் நாள் (24.09.1987)

24.09.1987

பெற்­றோர், பிள்­ளை­கள், சகோ­த­ரர்-­, உற்­றார், உற­வி­னர், நண்­பர்கள் இவர்­க­ளில் யாரா­வது எம் கண்­முன்­னால் இறக்க நேரி­டும்போது மனம் துன்­பத்­தில் மூழ்­கி­வி­டு­கி­றது. ஆனால், இவர்­க­ளில் ஒரு­வர் அணுஅணு­வா­க இறந்து கொண்­டி­ருப்­ப­தைப் பார்க்­கும்­போது… துய­ரத்­தின் எல்­லைக்கே நாம் போய்­வி­டு­கின்­றோம். உல­கமே சில வினா­டிக்­குள் வெறுத்துப் போய்­வி­டும். கண்­க­ளில் அழு­வ­தற்­குக் கண்­ணீர்­கூட எஞ்­சி­யி­ருக்­காது.

இவர்­க­ளில் ஒரு­வர் ஒரு சொட்டு நீர்­கூட அருந்­தா­மல் 10 நாள்க­ளாக எம் கண்முன்­னால் அணு அணு­வா­கச் சாவின் விளிம்­பில் நின்று தத்­த­ளிப்­ப­தைப் பக்­கத்­தி­லி­ருந்து பார்த்­துக்­கொண்­டி­ருக்­கும் போது ஏற்­ப­டும் மனவேதனை இருக்­கி­றதே…. அப்­பப்பா!… அதை வாய்­விட்­டுச் சொல்ல முடி­யாது. அத்­துனை கொடுமை அனு­ப­வித்­த­வர்­க­ளுக்கு மட்­டும் புரி­யும் அது. அதை நான் என் வாழ் நா­ளில் முதன்­மு­றை­யாக அனு­ப­விக்­கி­றேன்.

இதை­யெல்­லாம் என் கண்­க­ளால் பார்க்க வேண்­டும் என்று முன்பே தெரி­ருந்­தி­ருக்­கு­மா­னால் நான் திலீ­பன் இருந்த பக்­கமே தலை­வைத்துப் படுத்­தி­ருக்­க­மாட்­டேன். நான் முற்று முழு­தாக நினைத்­தி­ருந்­த­தெல்­லாம் இது­தான். இந்­தியா ஒரு பழம்­பெ­ரு­மை­மிக்க ஜன­நா­யக நாடு. காந்தி பிறந்த பொன்­னான பூமி. அகிம்­சை­யைப் பற்­றி­யும் – உண்­ணா­வி­ர­தத்­தைப் பற்­றி­யும் உல­கில் பெரு­மைப்­ப­டக்­கூ­டிய அள­வுக்கு காந்­தி­ய­டி­ கள் மூலம் புகழ்­பெற்ற நாடு. அப்­ப­டிப்­பட்ட ஒரு நாட்­டி­டம் நீதி கேட்டு அகிம்சை வழி­யில் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்த திலீ­பன். உண்­மை­யி­லேயே பாக்­கி­ய­சா­லி­தான். ஏனெ­னில், மற்­ற­வர்­க­ளுக்கு வழி­காட்­டி­யாக இருந்த நாடு நிச்­ச­ய­மாக திலீ­ப­னுக்­கும் ஒரு நல்ல வழி­யைக் காட்­டத்­தான் செய்­யும்…
தமிழ் மக்­க­ளின் அபி­லா­சை­களை ஓர­ள­வா­வது இந்­திய அரசு நிறை­வேற்­றத்­தான் போகி­றது…… என்ற எண்­ணத்­தில் தான் கண்­களை மூடிக்­கொண்டு… இந்தத் தியாக வேள்­வி­யில் என்­னால் முடிந்த பங்கை செலுத்­து­வ­தற்­குத் தயா­ரா­னேன். நான் நினைத்­த­தெல்­லாம்… இவ்­வ­ளவு விரை­வில் மாய­மான் ஆகி­வி­டும் என்று நான் கனவு கூட கண்­டி­ருக்­க­வில்லை…. எத்­தனை பெரிய ஏமாற்­றம் எத்­தனை பெரிய தவிப்பு?

இன்­றைய நிலை­யில் திலீ­பன் இருந்த நிலையை பார்த்தபோது நம்­பிக்­கையே அற்­று­விட்­டது. இனி ஒரு நல்ல தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்டு, அதன் பிறகு திலீ­பனை மருத்துவமனையில் சேர்த்தாலும் காப்­பாற்ற முடி­யுமா? என்­பது என்­னைப் பொறுத்த அள­வில் கேள்­விக்­கு­றி­தான். திலீ­ப­னைக் கொல்­வ­தற்கு அவர்­கள் திட­ம­னம் பூண்­டு­விட்­ட­னர் என்­பது புரிந்­து­விட்­டது. அதோ வானத்­தில் ஒரு வயோ­திக உரு­வம் முகில்­க­ளைக் கிழித்­துக்­கொண்டு என்­னையே பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

அவ்­வு­ரு­வத்­தின் தலை­யிலே மயி­ரிலே… கண்­க­ளில் வெள்ளைக் கண்­ணாடி…. அந்­தக் கண்­க­ளில் அரு­வி­யாக வழிந்து கொண்­டி­ருக்­கி­றது. அது என்ன? இரத்­தமா? அந்த மனி­தன் இரத்­தக் கண்­ணீர் சொரி­கி­றாரே… ஏன்? ஏன்? அடுத்து வேறு ஒரு உரு­வம்! அதன் தலை­யி­லும் மயி­ரைக் காண­வில்லை …. வானத்­தின் நடு­விலே வெள்­ள­ரசு மரத்­தின் அடி­யிலே அமர்ந்­தி­ருக்­கும் அந்த உரு­வம் எம்மை, இல்லை திலீ­ப­னையே பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

பௌர்­ணமி நில­வில் அந்­தக் கருணை முகத்­திலே…… கரு­ணை­யைத் தேடு­கின்­றேன்… ஆனால், காண­மு­டி­ய­வில்லை … ஏன் … ஏன்…? இந்­திய மண்­ணில் என்றோ தோன்றி மறைந்­து­விட்ட அந்த இரு சோதி­க­ளும் அல்ல, உரு­வங்­க­ளும் வெகு­நே­ரம் திலீ­ப­னைப்­பார்க்க முடி­யா­மல் வெட்­கிக் தலை­கு­னிந்­த­வாறு சிறிதுசிறி­தாக என் கண்­களை விட்டு மறைந்துகொண்­டி­ருக்­கின்­றன.
நேற்று சிறி­த­ள­வா­வது அசைந்து கொண்­டி­ருந்த திலீ­ப­னின் கை, கால்­கள் இன்று அசை­வற்று சோர்ந்து விட்­டன. உள்­மூச்சு மட்­டும் பல­மாக இழுத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. கண்­கள் உச்­சி­யிலே குத்­தி­விட்டு நிற்­கின்­றன. உட­லின் நிறம் சிறிது நீல­மாக மாறத் தொடங்­கி­விட்­டது.

நாடித்­து­டிப்­பைப் பரி­சோ­திக்­கி­றேன். 52 இரத்த அழுத்­தம்- 80/50. சரா­சரி மனி­த­னின் அள­வு­க­ளை­விட எல்­லாமே மிக­வும் குறைந்­துள்­ளன. இனித் திலீ­ப­னுக்கு எந்த நிமி­ட­மும் எது­வும் நடக்­க­லாம். ஐயோ… அதை நினைத்­துப்­பார்க்­கவே நெஞ்­சம் வெடித்­து­வி­டும் போலி­ருக்­கின்­றது.

அன்று திலீ­பன் கிட்டு அண்­ணா­வைப் பார்க்­க­வேண்­டும் என்­றாரே? இதற்­கா­கத்­தானா? இந்­திய அரசு தன் கோரிக்­கை­களை நிறை­வேற்­றாது என்­பதை அவர் உள்­ளூர அறிந்­த­வர் போல் அன்று உண்­ணா­வி­ரத மேடை­யி­லி­ருந்து எவ்­வ­ளவு தீர்க்­க­த­ரி­சி­யாக இதைக்­கூ­றி­னார். “நான் இறப்­பது நிச்­ச­யம்… அப்­படி இறந்­த­தும் வானத்­தி­லி­ருந்து என் தோழர்­க­ளு­டன் சேர்ந்து தமி­ழீ­ழம் மலர்­வ­தைப் பார்ப்­பேன்…’’ இந்த வார்த்­தை­களை இன்று ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் மறந்­தி­ருக்க மாட்­டார்­கள்….

Leave a Reply