இலங்கைக்கு அளப்பரிய சேவைகளை செய்தவர் எலிசபெத் மகாராணி! – அனுதாப உரையில் பிரதமர்

இலங்கை மக்களுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணி அளப்பரிய சேவை செய்துள்ளார் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பான அனுதாப பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிகையில்,

இலங்கை மக்களுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணி அளப்பரிய சேவை செய்துள்ளார். பிரித்தானியா தனது தாயை இழந்துள்ளது.

அவரது இறுதிக்கிரியைக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி கலந்துகொண்டமை முக்கியமான சிறப்பம்சமாகும்.

பொதுநலவாய மாநாடுகளின் தலைவராக பதவி வகித்தவர், இதன்போது மகத்தான பல பணிகளை மேற்கொண்டடிருந்தார். பொதுதுநலவாய அமைப்புகளுடன் இணைந்து நாமும் எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் மகாராணியின் மறைவால் கவலைகொண்டிருக்கும் பிரித்தானிய மக்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவி்ப்பதுடன் அவரது புதல்வரான மூன்றாவது சார்ள்ஸ் மன்னருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மறைந்த மகாராணியின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply