சம்பூரில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீதனவெளி காட்டுப்பகுதியிலிருந்து உருக்குழைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள இளக்கந்நை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதான மகேந்திரன் செல்வராசா என இணங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

விறகெடுக்கச் சென்ற நபரொருவர் காட்டுப்பகுதியில் சடலமொன்று உருக்குழைந்து கிடப்பதைக்கண்டு சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவ இடத்திற்கு மூதூர் நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் இல்லியாஸ் முபாரிஸ், சட்ட வைத்திய அதிகாரி கிரியெல்ல, சம்பூர் பொலிஸார் உள்ளிட்டோர் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply