வவுனியாவில் தொல்காப்பியர் சிலை திறந்து வைப்பு

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பியர் சிலை இன்று (சனிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் பா.கமலேஸ்வரி தலைமையில் முதன்மை அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர் கலந்துகொண்டார்.

நிகழ்வில் தொல்காப்பியரின் சிலையினை ஆசிரியர் சு.சிவச்சந்திரன் திறந்துவைத்ததோடு அதனை தொடர்ந்து அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி கௌரவம் செலுத்தப்பட்டது.

மேலும் நிகழ்வில் கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், உயர்தர்பரீட்சையில் உயர் பெறுபேறுகளை பெற்றமாணவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Leave a Reply