
ஒரே ஊசி மூலமாக உயிர் கொல்லி நோயான ஹெரோய்னை ஏற்றிக்கொண்ட ஐந்து அல்லது ஆறு பேர் ஈரல் அழற்சி காரணமாக, தினமும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்று மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே ஊசியால் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோய்னை ஏற்றியமைதான் அவர்கள் ஈரல் அழற்சியால் பாதிக்கப்பட முதன்மைக்காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றபோதே அவர்களில் பலர் ஈரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இனங்காணப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு, வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




