
எமது திருக்கோணேஷ்வர ஆலயத்தினை நில ஆக்கிரமிப்பு செய்துகொண்டிருக்கிறார்கள். அத்துடன் குறுந்தூர் மலையில் நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி விகாரை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சிங்கள பேரினவாதம் நீதிமன்றம் தங்களுக்கு கீழ் என்று நினைத்துக்கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் தலைவர் நிஷாந்தன் தெரிவித்தார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்திலே சபாநாயகர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதாவது புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய பேரவை என்ற சபையில் 36 பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக பெயர் பட்டியலினை வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் எங்கள் வட, கிழக்கினை பிரதிநித்துவப்படுத்தக் கூடிய சி.விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவருடைய பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த தேசிய சபையினை தமிழர்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் என்னவெனில் நமக்கான பிரச்சனைகள் தொடர்ந்தவாறு இருக்கின்றன. காணாமல் உறவுகளுக்கு என்ன நடந்தது, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திலும், சர்வதேசத்திலும் கோரிக்கை விட்டிருக்கின்றோம்.
அண்மையில் எமது திருக்கோணேஷ்வர ஆலயத்தினை நில ஆக்கிரமிப்பு செய்துகொண்டிருக்கிறார்கள். அத்துடன் குறுந்தூர் மலையில் நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி விகாரை கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சிங்கள பேரினவாதம் நீதிமன்றம் தங்களுக்கு கீழ் என்று நினைத்துக்கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களை அடக்கி, ஒடுக்குவதற்காவே இயங்குகின்றது. இதுக்கெதிராக கடந்த காலமாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
எனவே இந்த தேசிய பேரவைக்குள் எங்களது பாராளுமன்ற் உறுப்பினர்கள் போக கூடாது. போக மாட்டார்கள் என நம்புகிறோம். எமக்கு அரசியல் தீர்வுகள் கிடைக்கும் வரை அரசங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்குள், இராஜதந்திர திட்டங்களுக்குள் சென்று எங்களுக்காக இருப்பவையை இழக்கும் செயலினை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தற்போது 51 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கிறது. இதில் அரசாங்கத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலே முன்னிலை படுத்துவதற்காக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம். அத்துடன் பல கடசிகள் சேர்ந்து பல கோரிக்கைளையம், மகஜர்களையும் அனுப்பியிருந்தோம். இது தொடர்பாக சர்வதேசம் கரிசனை காட்டவில்லை . நரி தந்திரியான ரணில் விக்கிரமசிங்க ஆரம்ப காலத்தில் இருந்து அவர் ஜெனீவாவை கையாண்ட விதம் சற்று வித்தியாசமாகவே இருக்கின்றது.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஜெனிவா கூட்டத்தொடரிலே பிரதானமாக பேசப்பட்ட விடயம் என்னவெனில் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஆகவே இந்த பயங்கரவாத தடை சட்டத்தினை உடனடியாக நீக்கப்பட வேண்டும். அத்துடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும். இந்த தொனி தான் பேசப்பட்டதே தவிர எங்கள் பிரச்சனைகள் எதுவும் ஜெனிவாவில் ரணில் பேசவில்லை. எனவே இவர்கள் இராஜ தந்திரமான முறையிலே செயற்படுகிறார்கள்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பின் சில இடங்களை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்திருக்கின்றார். இது தமிழர்களுக்கு புதிய விடயம் அல்ல. ஆனால் இது சிங்கள மக்களுக்கு புதிதான விடயமாக இருக்கிறது.
அந்த இடத்தில் மக்கள் நடமாடுவதோ, போராடுவதோ சுதந்திரமாக செய்வதற்கு தடை விதிப்பதற்காக தான் இந்த உயர் பாதுகாப்பு வலயம் என அறிவித்திருந்தார்கள்.
அத்துடன் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்காகவும், அரசியலுக்காகவும் இந்த உயர் பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்படிருந்தது. இதனை சிங்கள மக்கள், இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த தடைகளைத் தாண்டி தான் எங்கள் தமிழ் மக்கள் இதுவரை காலமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டின் நிகழ்வில் நாங்கள் இறுதிக்கட்டத்தினை நெருங்கி உள்ளோம் .நாளைய தினம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்திற்கு அருகிலே அடையாள உண்னா விரதம் இருப்பதாக தியாக தீபம் திலீபனின் பொதுக்கட்டமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்றது.
தியாக தீபம் திலீபன் அன்று எந்த கோரிக்கைகளுக்காக இருந்தாரோ அந்தக் கோரிக்கைகளையும், எங்களது கோரிக்கைகளையும் முன்வைத்து இந்த உண்ணாவிரதத்தில் பெருமளவான மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு நாளைய தினம் அதனை எழுச்சி நிகழ்வாக அதனை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறன்.
இறுதி நாளான திங்கட்கிழமை காலை 8 .00 மணியளவில் திலீபனின் சொந்த ஊரில் இருந்து ஊர்திப்பவனிகள் ஆரம்பமாக இருக்கின்றன. இதன்போது பல காவடிகளையும், ஊர்திப்பவனிகளையும் பல அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றன.
இந்த நிகழ்விலும் அனைவரும் ஒற்றுமையாக கலந்துகொண்டு தன்னெழுச்சியாக கலந்துகொள்ள கொள்ளுமாறு தமிழ் தேசியப் பேரவை அறை கூவல் விடுகின்றது. – என்றார்.
பிற செய்திகள்




