தமிழ் கட்சிகளோடு இணைந்து புதிய அரசியலை அமைத்து மக்களுக்கு சேவை செய்ய ஆலோசித்து வருகிறேன்- பிரபா கணேசன்!

தமிழ் கட்சிகளோடு இணைந்து புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்து வடக்கு, கிழக்கு தமிழர்கள் மட்டுமின்றி இலங்கை வாழ் அணைத்து தமிழ் மக்களுக்கும் என்னால் முடிந்த சேவையை செய்ய உத்சித்துள்ளேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேஷன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண தமிழ் தலைவர்கள், வடக்கு, கிழக்கு தலைவர்கள், மலையக அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், மதத்தலைவர்கள் என அனைவரோடும் இணைந்து பயணித்து புதிய முயற்ச்சியை முன்னெடுக்க உள்ளதாக பிரபா கணேசன் தெரிவித்தார்.

மக்கள் சேவை என்பது எனக்கு புதிதல்ல பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்த நாம். பாடசாலை, இந்து ஆலயங்கள், வீதி புனரமைப்பு,சுயத்தொழில் ஊக்குவிப்பு என பல்வேறு சேவையை செய்துள்ளோம் தொடர்ந்தும் நலன் பணி செய்ய உத்தே சித்துள்ளோம் என்று தெரிவித்த அவர் புதிய கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் விரைவில் புதிய கூட்டணியை ஆரம்பிக்க உள்ளதாகவும் அதக்கான முன்னேற்பா டுக்களை திட்டமிட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டர்.

பிற செய்திகள்

Leave a Reply