வாழ்க்கை ஒளிமயமானதாக அமையை உங்கள் பருவத்தை முழுமையாக நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும்- ஜெபரட்ணம் அடிகளார்!

எங்களுடைய பிரதேசங்களைத் தாக்குகின்ற ஒரு பயங்கரமான ஒரு வியாதியாக இருப்பது இந்தப் போதைப்பொருள் பாவனையாகும்.இதன் பாரிய விளைவுகளை பற்றி வைத்திய நிபுணர்களும் ,சுகாதார அதிகாரிகளும் தொடர்ந்து எச்சரிக்கை செய்துகொண்டிருக்கிறார்கள்.

யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவிக்கையில்,

பல காலங்களாக போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஆனால் இன்றைய சூழலில் இது அதிகரித்த நிலையில் உள்ளது .பலர் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்தல் ,பாதுகாப்பு படையினருடைய போக்குகள் ஆகியன இந்த போதைப்பொருள் பாவனையில் செல்வாக்கு செலுத்துகின்றன.இதனை கட்டுப்படுத்தவது என்பது மிகவும் கஸ்டமான ஒன்றாக இருக்கிறது.

இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களை எதிர்த்து போராடுவது என்பது ஒரு உயிரினையே அர்ப்பணித்து போராடுவதற்கான போராட்டமாகும். இலத்தீன் ,அமெரிக்க நாடுகளில் எத்தனையோ குருக்கள்,துறவியர்கள் இன்றும் இந்த போதைப்பொருளுக்கு எதிரான போரரட்டங்களில் ஈடுபட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே இந்த செயற்பாட்டினை செய்ய முன்வருபவர்கள் பல்வேறு தியாகங்களை செய்ய முன்வருபவர்களாக இருக்க வேண்டும்.ஏனெனில் எங்கள் எதிர்கால சந்ததியினரை முற்றுமுழுதாக பாதிக்கின்ற பயங்கரமான நிலையில் இருக்கின்றது .

பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகள் மட்டிலே கவனமாக வழிப்படுத்துங்கள்.பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் கல்வி தராதரத்தினை மாத்திரம் குறிக்கோளாக கொள்ளாது ,பாடசாலை மனவர்களைந்த போதைப்பொருளில் இருந்து விடுதலை பெற்றவர்களாக இருக்கின்றார்களா என கண்காணிக்க வேண்டும்.

இளைஞர்கள் ,யுவதிகளே உங்கள் இளமைப் பருவம் மிக முக்கியமானது.உங்கள் வாழ்க்கை ஒளிமயமானதாக அமையை உங்கள் பருவத்தை முழுமையாக நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். இந்த போதைப்பொருளினால் உங்கள் இளமையினை அழித்து உங்கள் குடும்பத்தில் அமைதியின்மையினை ஏற்படுத்தி எதிர்கால வாழ்வை சீரழித்து வாழ்வதை நாங்கள் யாருமே விரும்பவில்லை.

போதைப்பொருளுக்கு எதிராக மதத்தலைவர்கள் ,குருக்கள்,துறவியர்கள் ,அரசாங்க உத்தியோகத்தர்கள்,பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள்,சமூக அபிவிருத்தி செயற்பாட்டில் இருக்கின்றவர்கள் என அனைவரும் இணைந்து ஒரு இயக்கத்தினை உருவாக்கி போராட வேண்டிய கட்டயமான நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply