ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த போலியான எந்த நடவடிக்கைக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

நேற்றைய தினம் இலங்கையினுடைய பாராளுமன்றத்திலே சபா நாயகர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதாவது புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய பேரவை என்ற சபையில் 36 பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக பெயர் பட்டியலினை வெளியிட்டு இருக்கிறார்கள்.இதில் என்னுடைய பெயரும் இணைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளதனை அறிந்திருந்தேன்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய முன்னணியி ன் தலைவர் கஜேந்திர பொன்னாபலம் தெரிவிகையில்,

அந்த தேசிய பேரவையில் உள்ள என்னுடைய ஆசனத்தினை நிரப்ப போவதில்லை என எனது உத்தியோக டுவிட்டரில் கருத்து ஒன்றினை பதிவு செய்து இருந்தேன். தேசிய சபை என்ற விடயம் எங்களுடன் ஆராயப்படவில்லை ,இதில் எங்களுடைய கருத்துக்களும் பதிவு செய்யவில்லை ,எந்தவிதமாகவும் எங்களுடன் கலந்துரையாடல் எங்களுடைய பெயர்களை அறிவித்திருந்த நிலையில் எங்களுடைய ஆசனத்தை நிரப்பப் போவதில்லை எனவும் அறிவித்திருந்தோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களோடு ஒத்திருப்பது என்றால் அது ஒரு குறுகிய தேவைக்காக மட்டும் தான் வழங்குவோம் என அரசாங்கத்திடம் சுட்டி காட்டியிருந்தோம்.

மக்களால் பாராளுமன்றத்தினை நிராகரித்த நிலையில் ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த போலியான எந்த நடவடிக்கைக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம்.அதனை மீறி எங்கள் அனுமதி இல்லாமல் எங்களின் பெயர்களை சுட்டி காட்டியிருக்கிறார்கள் என்பதனை மக்களுக்கு அறியத்தருகின்றோம்.என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply