யாழ். விஷ்ணு ஆலயங்களில் மிக சிறப்பாக இடம்பெற்ற புரட்டாசி சனி விரத உற்சவம்!

சனீஸ்வர பெருமானின் முக்கிய விரதங்களில் ஒன்றான முதலாவது புரட்டாசி சனி வார உற்சவம் இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள விஷ்ணு ஆலயங்களில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இவ் உற்சவ கிரியைகளை முன்னிட்டு வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் ஆலயத்திலும் சனீஸ்வர பெருமானின் உற்சவகிரியைகள் இடம்பெற்றன.

இதில் கருவறையில் அருள்பாலித்து விளங்கும் ஸ்ரீவேங்கடவரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி,ஆகிய தெய்வங்களுக்கும் நவக்கிரக தெய்வங்கள் சனிஸ்வரபெருமான்,தெய்வங்களுக்கு அபிஷேச ஆராதணைகள் என்பன இடம்பெற்று எம்பெருமான் சமேதராக கருடவாகன சேவையில் வீற்று உள்வீதியுடாக வீற்று அருள்பாலித்தனர்.

இவ் சனிஸ்வரவிரத உற்சவத்தினை ஆலய பிரதம குரு ரமணிஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.

இதில் மாவட்டத்தில் இருந்து பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் விரதநேர்த்தியினை  நிறைவேற்றுக்கொள்ளும் வகையில் எள்ளெண்ணெய் சிட்டி எரித்தும் நவக்கிரக பகவானுக்கு அபிஷேசகம் அர்ச்சனை செய்துதமது  விரதத்தினை பூர்த்தி செய்தனர்.

இவ் விரத உற்சவம் எதிர்வரும்  மூன்று சனிக்கிழமை உற்சவம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply