
கொழும்பு, செப். 24: பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கொழும்பில் நடந்த சவூதி அரேபிய தேசிய தின நிகழ்வில் பங்கேற்றுள்ளார். முஸ்லிம் நாடுகள், முஸ்லீம் அமைப்புகள் மீது கடந்த காலத்தில் ஞானசார தேரர் கொண்டிருந்த கடும் மதவாத கொள்கைகள் காரணமாக, இந்த நிகழ்வில் ஞானசார தேரர் கலந்து கொண்டுள்ளது பெரியளவில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
சவூதி தூதுவரின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஞானசார தேரர் தூதுவருடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகேயும் கலந்து கொண்டார்.




