மட்டு.மாவட்டத்தில் கடும் மழை— 48 மணிநேரத்தில் 119.9 மில்லிமீற்றர் மழை பதிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் அடை மழை காரணமாக பல இடங்களில் பாதைகள்  தாழ் நிலப்பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நேற்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிவரையான 48 மணித்தியாலங்களில் இம்மாவட்டத்தில் 119.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நாவற்குடா, ஆரையம்பதி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு, காத்தான்குடி, கிரான்,  உட்பட பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் நீர் தேங்கியுள்ளால் போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.

Leave a Reply