
Today Rasi Palan 26th November 2021 | இன்றைய ராசிபலன் : நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.
ரிஷபம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். சொத்துப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.
கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். உறவினர்களுடன் பகைமை வந்து செல்லும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கன்னி: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். புகழ் கௌரவம் கூடும் நாள்.
துலாம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். சாதிக்கும் நாள்.
விருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகள் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.
மகரம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதாயமடைவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினரின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.





