தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், செங்கல்பட்டு,  ஆகிய மாவட்டங்களிலேயே கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடலூர்,  கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி,  திருச்சி,  கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில் நாமக்கல்,  திருவண்ணாமலை,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம்  ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply