மூவாயிரம் சிறு பாலங்களை அமைக்கும் பணியும் ஆரம்பம்

ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைய ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5000 சிறு பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அதில் 3000 பாலங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 250 பாலங்களின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அவற்றுக்கான திட்டங்கள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய முறைப்படி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply