இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியின் கூற்றுக்கு சீனா கடும் ஆட்சேபனை!

இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை விடவும் சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என பிபின் ராவத் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வடக்கு எல்லை பகுதியில் சீனா படைகளைக் குவித்து வருகின்றது.  அங்கு ஆபத்து அதிகமாக இருக்கின்றது எனவும் பிபின் ராவத் கூறியிருந்தார்.

இந்நிலையில் குறித்த பிபின் ராவத்தின்  கருத்துக்கு சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம், பொறுப்பற்ற அபாயகரமான கருத்து என  கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனப்பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த கர்னல் வு கியான் கூறியுள்ளதாவது, “இந்திய அதிகாரிகள் சீன இராணுவ அச்சுறுத்தல் என்று கூறுவது  ஊகங்கள் மட்டுமே .

ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லாமல், புவிசார் அரசியல் மோதலைத் தூண்டிவிடுவது பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது.

இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று அச்சுறுத்தலாக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply