T-56 ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் திருகோணமலையில் கைது!

<!–

T-56 ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் திருகோணமலையில் கைது! – Athavan News

திருகோணமலை – தோப்பூர் பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

T-56 ரக துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் – சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *